திமுக கள ஆய்வுக்குழு கருத்து கேட்பு, கீதாஜீவன் வரவேற்றார்
தூத்துக்குடி தொகுதியில் திமுக கள ஆய்வுக்குழு கருத்து கேட்பு கூட்டம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் வரவேற்றார்.
தூத்துக்குடி, தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் திமுக கள ஆய்வுக்குழு நியமிக்கபட்டு, தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு நடைபெற்று வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விளாத்திகுளம், கோவில்பட்டி தொகுதிகளில் கள ஆய்வுக்குழு கருத்து கேட்பு நடத்திய நிலையில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி கள ஆய்வு கருத்து கேட்பு கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
கள ஆய்வுக்குழுவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, திமுக மாநில அயலக அணி துணைச் செயலாளர் சேலம் உமாராணி ஆகியோரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் வரவேற்றுப் பேசுகையில்;
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தூத்துக்குடி தொகுதி தேர்தல் முடிவுகள், பணிகள் குறித்து கள ஆய்வுக்குழுவிடம் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை நேரடியாகவும் எழுத்துபூர்வமாகவும் வழங்கலாம். வரும் காலம் திமுகவின் காலமாக அமைவதற்கு அனைவரும் கழகத் தலைவர் முக.ஸ்டாலின் வழியில் ஓயாமல் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என்றும் குழுவினரை வரவேற்று பேசினார்.
கள ஆய்வுக்குழுவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, திமுக மாநில அயலக அணி துணைச் செயலாளர் சேலம் உமாராணி ஆகியோர் நிர்வாகிகள் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநகர துணைச் செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், பிரமிளா, துணை மேயர் ஜெனிட்டா, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மாநில சிறுபான்மையினர் அணி துணைச் செயலாளர் பொன்சீலன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன் நிர்மல்ராஜ், ஜெயக்குமார் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார் மேகநாதன், தலைமைக் கழக பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பாலகுருசாமி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர் இளம்பரிதி, மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், அயலக அணி அமைப்பாளர் அசோக், மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாி தங்கம், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜான்சன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜோசப் அமல்ராஜ், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் பிரபு, அந்தோணி கண்ணன், நாகராஜன், அருணா தேவி, மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட பிரதிநிதிகள் சோ்மபாண்டியன், ராஜ்குமார், இசக்கி ராஜா, செல்வக்குமார், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், இளைஞர் அணி அமைப்பாளர் அருண் சுந்தர், அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், தொழிலாளர் நல அணி அமைப்பாளர் முருக இசக்கி, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணாதுரை, அஸ்வின், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் செல்வின், ஐ.ரவி, வட்டச் செயலாளர்கள் விஜயகுமார், மூக்கையா, சுப்பையா, சேகர், பொன்ராஜ், ரவிச்சந்திரன், டென்சிங், பாலகுருசாமி, கருப்பசாமி, சுரேஷ், சிங்கராஜ், தெய்வேந்திரன் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயசீலி, வைதேகி, மார்ஷ்லின், நாகேஸ்வரி, ஜான் சீனிவாசன், பவானி, மரியகீதா, மகேஸ்வரி, பாப்பாத்தி, ஜாக்குலின் ஜெயா, பேபி ஏஞ்சலின், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் அல்பட் மணி, பிரபாகர், ஆவுடையப்பன், உள்பட பகுதி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை ஆய்வு குழுவிடம் வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் தெரிவித்தனர்.
