கலைஞர் பிறந்தநாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கீதாஜீவன் அரிசி பை வழங்கினார்
தூத்துக்குடியில் கலைஞர் பிறந்தநாளையொட்டி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் அாிசி பைகளை வழங்கினார்.
தூத்துக்குடி, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாநகர வா்த்தகர் அணி அமைப்பாளர் ஆனந்தசேகர் ஏற்பாட்டில் மீளவிட்டான் முத்து நகர் பார்வையற்றோர் அறக்கட்டளை இல்லத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பார்வையற்றோர் 35 குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ அாிசி பைகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வழங்கி அவர்களிடம் நலம் விசாாித்து பரிசுகள் வழங்கி கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர் கனகராஜ், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், அண்ணாநகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, வட்டச் செயலாளர் பாலகுருசாமி, ஐடி விங் அண்ணாதுரை, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
