செய்திகள்அண்மை செய்திகள்

ஐந்து பவுன் தங்க நகையை ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு மேயர் ஜெகன் பாராட்டு

Share the news

மாநகராட்சி குப்பை வண்டியில் தவறுதலாக போட்ட 5 பவுன் தங்க சங்கலியை மூதாட்டியிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி மரியாதை செய்த மேயர் ஜெகன் பொியசாமி, ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் பாராட்டினர்.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தினமும் காலையில் மினி லாரிகள் மூலம் தூய்மை பணியாளர்கள் வீடுகளேக்கு வீடாக சென்று குப்பைகளை சேகாிப்பது வழக்கம். இந்நிலையில் அண்ணாநகர் 3வது தெரு பகுதியில் தூய்மை பணியாளர்கள் வழக்கம் போல் குப்பைகளை சேகாித்து கதிர்வேல் நகர் பகுதியில் உள்ள நுண் உர மையத்துக்கு கொண்டு சென்றனர்.
அண்ணாநகர் 3வது தெருவைச் சேர்ந்த முத்துமாலை என்ற பெண் வழக்கம் போல் குப்பைகளை அந்த வண்டியில் கொட்டி உள்ளார். அப்போது முத்துமாலை இடுப்பில் வைத்திருந்த மணி பர்ஸை காணவில்லை. அதில் 5 பவுன் தங்கச் சங்கிலி வைத்து இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் குப்பை கழிவுகளோடு சேர்த்து மணிபர்ஸை குப்பை வண்டியில் கொட்டி இருக்கலாம் என்று சந்தேகித்து உடனடியாக நுண் உரமையத்திற்கு விரைந்து சென்று சம்பவத்தை கூறியுள்ளார். அந்த பகுதியில் சேகாிக்கப்பட்ட குப்பைகளை கொட்டப்பட்டாமல் அப்படியே வண்டியில் இருந்தது. இதைத் தொடர்ந்து முத்துமாலை வேண்டுகோளுக்கிணங்க அந்த வண்டியில் இருந்து குப்பைகளை பாதுகாப்பாக கொட்டி தூய்மை பணியாளர்கள் முனீஸ்வரி, ராணி பொன்செல்வி மற்றும் ஓட்டுநர் இசக்கிராஜா ஆகியோர் தேடினார்கள். அப்போது மூதாட்டி போட்ட வாழை இலை கழிவுகளுக்கு மத்தியில் நகையுடன் மணிபர்ஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 5 பவுன் நகையுடன் மீட்கப்பட்ட மணிபர்ஸை அந்த பெண்ணிடம் தூய்மை பணியாளர்கள் பத்திரமாக ஒப்படைத்தனர். இதனால் தூய்மை பணியாளர்களுக்கு மூதாட்டி நெகழ்ச்சியுடன் நன்றி தொிவித்தார்.

இந்நிலையில் நேர்மையுடன் பணிசெய்த தூய்மை பணியாளர்களை மாநகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து 5 பேரையும் ஊக்குவிக்கும் விதமாக மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் ஊக்கத் தொகை வழங்கி, சால்வை அணிவித்து மரியாதை செய்து பேசுகையில் மாநகராட்சிக்கு பெருமையை தேடித்தந்த உங்களது நேர்மையை பாராட்டுகிறோம் பேரிடர் காலங்களில் தூய்மைப் பணியாளர்கள் ஆற்றிய பணிகளை வாழ்நாளில் மறக்க முடியாது 60 வார்டுகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு முன் உதாரணமாக நீங்கள் இருந்து பணியாற்றியதை போல் எல்லோரும் இதே போன்று பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

விழாவில் நகர நல அலுவலர் கணேஷ், சுகாதார ஆய்வாளர் சந்தனகுமார் திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், ஜேஸ்பர், மேயர் உதவியாளர் ரமேஷ், ஆணையாின் உதவியாளர் துரைமணி, உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன