செய்திகள்அண்மை செய்திகள்

உலக சுற்றுசூழல் தினம் மேயர் ஜெகன் மரக்கன்று நட்டுவைத்தார்

Share the news

தூத்துக்குடியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக் கன்றுகளை நடவு செய்து மேயர் ஜெகன் தலைமையில் ஊறுதி மொழி ஏற்பு

பூமியையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில் உறுதிமொழி ஏற்று, மரக்கன்றுகள் நடப்பட்டன.

தூத்துக்குடியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், மாநகராட்சி 3 வது வார்டு ஹவுசிங் போர்டு பகுதியிலுள்ள மாநகராட்சி மகளிர் பிங்க் பூங்காவில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மரக்கன்றுகள் நட்டுவைத்து இயற்கை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மகளிர் பூங்காவில் கூடுதல் மின்விளக்குகள், குடிநீர் வசதி மற்றும் இரவு நேரத்தில் பூங்கா பயன்படுத்தும் நேரத்தை அதிகரித்து தர வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கோரிக்கை வைத்தனர். இது குறித்து மேயர் கூறுகையில் மகளிர் பூங்கா இரவு 9 மணி வரையில் பூங்கா செயல்படும் சில தினங்களில் குடிநீர் வசதி செய்து தரப்படும், கூடுதல் மின்விளக்குகள் அமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொதுமக்களிடம் மேயர் ஜெகன் கூறினார். நிகழ்ச்சிக்கு திமுக மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், மாமன்ற உறுப்பினர்கள் அந்தோணி பிரகாஷ் மார்ஷ்லின், ரெங்கசாமி, சுகாதார அலுவலர்கள் ஹரி கணேஷ், ராஜசேகர் பகுதி பிரதிநிதி பிரபாகர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன