செய்திகள்அண்மை செய்திகள்

ஐக்கிய ஜனதா தளத்தினர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

Share the news

தூத்துக்குடியில் ஐக்கிய ஜனதா தளத்தினர் 50க்கும் மேற்பட்டோர் அக் கட்சியிலிருந்து விலகி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தள கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் குழந்தை பாண்டி, மாவட்ட செயலாளர் வெயிலாட்சி, மாநகர தலைவர் சக்தி செல்வன், மாவட்ட துணை செயலாளர் அருண்குமார், மாநகர துணை செயலாளர்கள் முருகேசன், உமையலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கமர்தீன் பாய், செயற்குழு உறுப்பினர் சத்யா மற்றும் தொண்டர்கள் சுமார் 50 பேர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் கலைஞர் அரங்கில் திமுக வில் இணைந்தனர். அவர்கள் அனைவரையும் மாவட்ட செயலாளர் கீதாஜீவன் திமுக சால்வை அணிவித்து வேஷ்டி சேலை வழங்கி கௌரவித்து திமுகவில் இணைந்தமைக்கு வாழ்த்து கூறி வரவேற்றார்.
தங்களது பகுதியில் திமுக ஆட்சியில் நடைபெற்ற திட்டங்களை, கழகத் தலைவர் முக.ஸ்டாலின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி வரும் காலங்களில் திமுகவின் வெற்றிக்கு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, அந்தோணி கண்ணன், மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப் பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன