செய்திகள்அண்மை செய்திகள்

அம்பேத்கர் சிலைக்கு செயற்கை நீரூற்று

Share the news

தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலை வளாகத்தில் செயற்கை நீரூற்று அமைத்து தர மேயர் ஜெகன் பொியசாமியிடம் நந்தமிழர் தொழிலாளர் நலச் சங்கத்தினர் கோரிக்கை, விரைவில் நிறைவேற்றி தருவதாக மேயர் உறுதி.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பொியசாமியை, நந்தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் தாமோதரன், செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஸ்டீபன் ஜெயராஜ், கௌரவ தலைவர் துரை, கௌரவ ஆலோசகர் மதிவாணன் ஆகியோர் சந்தித்து மாநகராட்சிக்குட்பட்ட பாளை ரோடு பகுதியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலை அமைந்துள்ள வளாகத்தில் செடிகள் வைத்து பராமரிப்பதற்காக தண்ணீர் வசதி வேண்டியும் அலங்கார நீரூற்று ஒன்றும் அமைத்துத் தருமாறு நந்தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பாக கோரிக்கை விடுத்தனர்.
அம்பேத்கர் சிலை வளாகத்தில் தற்போது செடிகள் வைப்பதற்காக தண்ணீர் வசதி செய்து கொடுத்துள்ளேன். மேலும் வரும் நாட்களில் செயற்கை நீரூற்று ஒன்றும் நேர்த்தியாக அமைத்து தருகிறேன் என்று மேயர் ஜெகன் பொியசாமி உறுதி அளித்தார்.

இந்நிகழ்வின் போது துணை மேயர் செ.ஜெனிட்டா, மண்டலத் தலைவர் தொ.நிா்மல்ராஜ், மேயர் உதவியாளர் ரமேஷ், உள்பட பலர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன