செய்திகள்அண்மை செய்திகள்

தூத்துக்குடியில் உயிரிழந்த அருணாசலம் குடும்பத்திற்கு தேமுதிக நிதியுதவி

Share the news

தூத்துக்குடியில் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த வாலிபர் அருணாசலம் குடும்பத்தாருக்கு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் சார்பில் மாவட்ட செயலாளர் தயாளாலிங்கம், ஆறுதல் கூறி நிதியுதவியை வழங்கினார்.

தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டு அமுதா நகர் 1-வது தெருவைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் அருணாச்சலம் (24). இவரைக் கடந்த சில தினங்களுக்கு முன்பு எஃப்.சி.ஐ (FCI) குடோன் எதிரே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக, தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தரண்யா தலைமையிலான போலீசார் கைது செய்து, தென்பாகம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியபோது அருணாச்சலத்திற்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஜூலை 23 அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
​இதனையடுத்து, உயிரிழந்த அருணாச்சலத்தின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மருத்துவமனை மற்றும் காவல் நிலையப் பகுதியில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதற்குக் காரணமான தென்பாகம் காவல் நிலைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

​இந்நிலையில், உயிரிழந்த வாலிபர் அருணாச்சலத்தின் குடும்பத்தினருக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாவட்டச் செயலாளர் தயாளலிங்கம் மூலம் தொலைபேசி வாயிலாக நடந்த சம்பவம் குறித்து உயிரிழந்த அருணாசலம் அப்பா நாகராஜன், அம்மா பரமேஸ்வரி, தம்பி சுடலைமணி ஆகியோரிடம் விசாரித்து ஆறுதல் கூறினார். பின்னர், தேமுதிக சார்பில் மாவட்டச் செயலாளர் தயாளலிங்கம் உயிரிழந்த அருணாச்சலத்தின் பெற்றோரிடம் நிதியுதவியை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார். பகுதி செயலாளர் அரச முத்து. மாவட்ட அவைத்தலைவர் அலெக்சாண்டர். மாவட்ட துணை செயலாளர் லிவிங்ஸ்டன், சம்சுதீன், மாவட்ட பொருளாளர் ராஜன், பகுதி செயலாளர் வல்லரசு துரை. நாராயண மூர்த்தி. தொழில் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன். வட்ட செயலாளர் ராஜா. முத்தையாபுரம் பகுதி பொறுப்பாளர். அந்தோணி ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன