தமிழக பட்ஜெட் காங் மாவட்ட தலைவர் பெருமாள்சாமி வரவேற்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் முதல்வர் விஜய் அரசின் புதிய பட்ஜெட்டுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள் சாமி வரவேற்பு.
தூத்துக்குடி:
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் தலைமையிலான அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய பட்ஜெட்டுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
”தமிழக வெற்றிக் கழக அரசின் முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட்டில், பெருந்தலைவர் காமராஜர் பெயரில் சிறப்புப் பள்ளிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.
மேலும், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கல்வி, உணவு, சீருடை மற்றும் தங்குமிடம் ஆகிய அனைத்தையும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘கல்வி ஒன்றே நாட்டின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்’ என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில், பெருந்தலைவர் காமராஜரின் கனவை நனவாக்கும் வகையில் செயல்பட்டு வரும் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் பெருமாள் சாமி குறிப்பிட்டுள்ளார்.
