செய்திகள்அண்மை செய்திகள்

தூத்துக்குடி வளர்ச்சிக்கு எம்பி, மேயருடன் இணைந்து உதவுவேன். கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பி

Share the news

தூத்துக்குடி வளர்ச்சிக்கு கனிமொழி எம்.பி., மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருடன் இணைந்து உதவத் தயார்: ராஜ்யசபா எம்.பி. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

தூத்துக்குடியில் உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 444-வது ஆண்டுத் திருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தினமும் பல்வேறு சிறப்புத் திருப்பலிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
​இந்நிலையில், திமுக சார்பில் மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினராகத் தேர்வாகியுள்ள கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், பனிமய மாதா பேராலயத்திற்கு வருகை தந்தார். அவருக்கு பேராலய அதிபர் ஜான் செல்வம் சால்வை அணிவித்து, பனிமய மாதா படத்தை நினைவப்பரிசாக வழங்கி வரவேற்பு அளித்தார். முன்னதாக, பனிமய மாதாவுக்கு கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி. ரோஜாப் பூமாலை அணிவித்து வழிபாட்டினை மேற்கொண்டார்.
இ​தனைத் தொடர்ந்து, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பாண்டியபதி படத்திற்கு கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி. மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

​பரதர் நலச் சங்க விழாவில் பங்கேற்பு
பாண்டியபதி பரதர் நலச் சங்கத் தலைவர் இன்னாசி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மாநிலங்களவை உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேசியதாவது:
​”எனக்கும் மேயர் ஜெகன் பெரியசாமிக்கும் இடையேயான உறவு 12 ஆண்டுகளுக்கும் மேலானது. தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேயர் சிறப்பாகச் செய்து கொடுத்துள்ளார். அதேபோல, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் மாவட்ட வளர்ச்சிக்குத் தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகிறார்.
​உங்களுக்கு மேலும் பல உதவிகள் தேவைப்பட்டால், அவர்கள் இருவருடனும் இணைந்து பணியாற்ற நானும் தயாராக இருக்கிறேன். முன்பு ஒரு கை ஓசையாக இருந்தது, இனி இரு கை ஓசையாக மாறும். கடற்கரைச் சமூகத்தைச் சேர்ந்த நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
​மறைந்த வலம்புரி ஜானுக்குப் பிறகு, 45 ஆண்டுகள் கழித்து மீண்டுமொரு பரதர் சமூகத்தைச் சேர்ந்த எனக்கு எம்.பி. பதவி வழங்கியது திமுக தான். தொழிலாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த தந்தை பெரியாரின் வழியில் வந்ததுதான் திராவிட இயக்கங்கள். இந்த மாவட்டத்தின் வளர்ச்சியில் கனிமொழி எம்.பி-யின் பங்கு மிக முக்கியமானது. தூத்துக்குடியின் அனைத்துப் பகுதிகளும் வளர்ச்சி அடைவதே ஒட்டுமொத்த மாவட்டத்தின் உண்மையான வளர்ச்சியாகும். உங்களுக்கு எப்போதும் நான் துணையாக இருப்பேன். என்று கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எம்.பி. கூறினார்.

​​நிகழ்ச்சியில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:
​”எனது தந்தையார் காலத்திலிருந்தே இந்தச் சமூகத்துடனான உறவு தொடர்ந்து வருகிறது. ராவ்பகதூர் குருஸ் பர்னாந்து புகழைப் போற்றும் வகையில், திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுடன் எம்.ஜி.ஆர். பூங்கா அருகில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
​குருஸ் பர்னாந்து சிலையை மாநகராட்சி நிர்வாகமே பராமரிக்க வேண்டும் என்ற உங்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேராலயப் படிக்கட்டுகளைச் சீரமைக்கும் பணியும் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் நலனுக்காக உங்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவேன் என மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

​பின்னர் பாண்டியபதி பரதர் நலச் சங்கத்தின் சார்பில் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி. மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கு ரோஜாப் பூமாலை அணிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கிச் சிறப்பு கௌரவம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலாளர் அந்தோணிசாமி, பொருளாளர் ஜான், மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், மீனவரணி அமைப்பாளர் டேனியல், பகுதிச் செயலாளர் சுரேஷ்குமார், வட்டச் செயலாளர் ரவீந்திரன், மின்வாரிய தொழிற்சங்கத் தலைவர் பேச்சிமுத்து, தெற்கு மாவட்ட திமுக மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சோபியா, ராதாபுரம் ஒன்றிய திமுக செயலாளர் ஜூடு, திருநெல்வேலி மாநகரச் செயலாளர் வழக்கறிஞர் தினேஷ், தொழிற்சங்கத் தலைவர் அகஸ்டின், விவசாய அணி துணை அமைப்பாளர் கண்ணன், பேராசிரியர் ஜெயந்தி மாலா, ரோசன், ஆர்தர் மச்சாது, போல்பேட்டை பகுதி ஜேஸ்பர் உள்ளிட்ட பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன