செய்திகள்அண்மை செய்திகள்

தவெக பெண் நிர்வாகியிடம் ரகசிய வீடியோ செல்போன் பறிப்பு! தவெக முக்கிய பிரமுகர் தலைமறைவு.

Share the news

தூத்துக்குடி, ஆறுமுகநேரியில் ரகசிய வீடியோக்கள் இருந்ததாக கூறப்படும் செல்போனை தவெக பெண் நிர்வாகியிடம் இருந்து பறித்த தவெக நிர்வாகி கைது! முக்கிய பிரமுகர் தலைமறைவு!

ஆறுமுகநேரி ராஜமன்யபுரம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் இவரது மனைவி ரோகினி (வயது 35) தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் சாலையில் பைக் ஒர்க்ஷாப் அருகில் ஸ்கூட்டரில் நின்று கொண்டு தவெக உறுப்பினரான ஆலந்தலை தெற்கு தெருவை சேர்ந்த சிபாஸ் (வயது 28) என்வருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ரோகிணி தனது செல்போனை தனது ஸ்கூட்டரின் முன்பகுதியில் வைத்துள்ளார் இதனை நோட்டமிட்ட மர்ம நபர் திடீரென்று அந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளார் உடனே அருகில் இருந்த சிபாஸ் அந்த நபரை துரத்திச் சென்றுள்ளார் பின்னர் அவர் திரும்பி வந்து மர்ம நபர் தப்பி சென்றுவிட்டதாக ரோகிணியிடம் கூறியுள்ளார். இதுகுறித்து ரோகிணி ஆறுமுகநேரி போலீஸில் அழித்த புகாரின் வழக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் சில முக்கிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தூத்துக்குடி காமராஜர் கல்லூரி எதிரே முனியசாமி புரத்தில் வசித்து வரும் தமிழக வெற்றிக் கழக முக்கிய பிரமுகர் மனவை ரூஸ்வெல்ட், இவர் தூத்துக்குடி மத்திய மாவட்ட தவெக செயலாளரும் மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத்’தின் நெருங்கிய நண்பர் என கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் தவெக தலைவர் ஜோசப் விஜய் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டி 19.02.2026 அன்று ரூபாய் பத்தாயிரம் கட்டி விருப்பமனு செய்தவர். இந்நிலையில் தவெக பிரமுகர் மனவை ரூஸ்வெல்ட்க்கும், தவெக செயற்குழு உறுப்பினர் ரோகிணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது பழக்கம் தொடர்பான ரகசிய வீடியோ மற்றும் ஆடியோக்கள் ரோகினின் செல்போனில் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது எனவே இது பொதுவெளியில் தெரிந்தால் அவமானம் ஆகிவிடும் என்று கருதி மனவை ரூஸ்வெல்ட், தவெக உறுப்பினர் சிபாஸ் வசம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிபாஸ் தனது நண்பரான உடன்குடி தேரியூரைச் சேர்ந்த ஆதிநாராயணன் மகன் புனிதராஜ் செல்வத்துடன் சேர்ந்து ரோகினியின் செல்போனை பறிக்க திட்டமிட்டு அதன்படி சம்பவத்தன்று ரோகிணியை சிபாஸ் வரவழைத்து பேசிக் கொண்டிருந்ததும் அப்போது அங்கு வந்த புனித ராஜ் செல்போனை பறித்து சென்றதும் அவரை பிடிக்க சொல்வது போன்று சிபாஸ் துரத்தி சென்று நாடகமாடியதும் தெரிய வந்துள்ளது. இதை அடுத்து சிபாஸ்ஸை போலீசார் கைது செய்தனர். புனிதராஜ் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளது அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புனிதராஜ், ரோகிணியிடம் திருடிய செல்போனை மனவை ரூஸ்வெல்ட்டிடம் ஒப்படைத்துள்ளார். இது குறித்த விசாரணைக்காக மனவை ரூஸ்வெல்டை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆட்சியாளர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் மனவை ரூஸ்வெல்ட் அதிகாரத்தை பயன்படுத்தி தப்பி வருவதாக கூறப்படுகிறது. அவர் கிடைத்தால் தான் ரோகிணியிடம் இருந்து பறித்த செல்போனில் என்னென்ன ரகசிய அந்தரங்க வீடியோக்கள் இருக்கிறதா என்பது குறித்த விபரங்கள் தெரியவரும். இந்த சம்பவம் தூத்துக்குடி தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன