“கலைஞர்103” மாணவரணி சார்பில் நலத்திட்டங்கள்
தூத்துக்குடி மாநகர திமுக மாணவரணி சார்பில் “கலைஞர் 103” பிறந்த நாளை முன்னிட்டு அங்கன்வாடி குழந்தைகளுடன் கேக் வெட்டி இனிப்பு வழங்கி எழுது பொருள்கள் வழங்கினர்.
தூத்துக்குடி,
முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் ஆணைப்படி, பல்வேறு வகையான நலத்திட்டங்களை வடக்கு மாவட்ட திமுகவினர் ஏழை எளிய மக்கள் , முதியோர்கள் மாணவர்கள் என வழங்கி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகர திமுக மாணவரணி சார்பில் ஜார்ஜ் ரோடு கீதாஜீவன் நகர் அங்கன்வாடி மையத்தில் ஜூன் 10ந் தேதி “கலைஞர் 103” பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநகர மாணவரணி அமைப்பாளர் டைகர் வினோத் தலைமை வகித்தார், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர்கள் வே.கிங் பாலா, செ.கார்த்திகேயன் முன்னிலையில் கேக் வெட்டி அங்கன்வாடி குழந்தைகள் 25 பேருக்கு வழங்கி அவர்களுக்கு தேவையான எழுது பொருட்களையும் வழங்கினர்.
இதில் மாநகர மாணவரணி துணை அமைப்பாளர்கள் சத்யா கந்தசாமி, தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.என். அண்ணாதுரை மற்றும் 36வது வார்டு இளைஞர் அணி அமைப்பாளர் ஐ.விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
