அண்மை செய்திகள்செய்திகள்

தூத்துக்குடியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட தவெக போர்டுகளை அகற்ற வழக்கறிஞர் புகார் மனு.

Share the news

தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள சாலைகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏராளமான டிஜிட்டல் பேனர்கள் மற்றும் போர்டுகள் அரசு அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளன. இந்த தவெக விளம்பர டிஜிட்டல் போர்டுகளால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் தவெக நிர்வாகிகளால் வைக்கப்பட்டுள்ளன.
இதனால் விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன், நகர காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் அவர்களிடம் புகார் மனு அளித்துள்ளார்
.

இந்த புகார் மனுவில் வழக்கறிஞர் சீனிவாசன் கூறியுள்ளதாவது;
தூத்துக்குடி மாநகரில் வைக்கப்பட்டுள்ள ஏராளமான தவெக விளம்பர டிஜிட்டல் போர்டுகள் அரசு அனுமதி இன்றி, போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் வகையிலும் டிவைக்கப்பட்டுள்ளதை உடனடியாக அகற்றிடவும், இந்த சட்ட மீறுதலில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் சீனிவாசன் தனது புகார் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்
.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன