திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் 7வது முறையாக வெற்றி
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் 5872 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திருச்செந்தூர் தொகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் இறுதியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் திமுக வேட்பாளருமான அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். கடும் போட்டி நிலவிய இந்தத் தொகுதியில், திமுக, பாஜக, தவெக என மும்முனை போட்டி நிலவியதில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் ஜெ.முருகனை 5872 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது வெற்றியை உறுதி செய்து ஏழாவது முறையாக திருச்செந்தூரில் வெற்றி பெற்ற அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் தொகுதியை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
இறுதி சுற்று வாக்கு விவரம்:
அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ( தி.முக ) 72,723
ஜெ.முருகன் ( தவெக ) 66,851
ராதாகிருஷ்ணன் ( பாஜக ) 34,159
ஒபிலியா ( நாம் தமிழர் ) 9794
