தூத்துக்குடியில் ஜென்’சி மீட்டப், கீதாஜீவன் சிறப்புரை
திமுக மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது! மீண்டு வருவோம் மீண்டும் வருவோம்! தூத்துக்குடி ஜென்’சி மீட்டப் இளைஞர்கள் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கீதாஜீவன் சிறப்புரை.
தூத்துக்குடி,
தமிழகம் முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ஜென்’சி திமுக சார்பில் இளைஞர்களுக்கான “ஜென்’சி திமுக மீட்டப்” நிகழ்ச்சி தூத்துக்குடி போல்பேட்டை மைதானத்தில் நடைபெற்றது.
இளம் பேச்சாளர் சங்கர நாராயணன், வசந்த், மதன், டேனியல் ரூபன், சாம் டினோ மற்றும் உமாராணி ஆகியோரின் முன்னெடுப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு இளம் பேச்சாளர் சஞ்சய் வரவேற்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
“நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கொள்கையோடு மக்களை சந்தித்தது தேர்தலில் திமுக தோல்வியடையவில்லை; வெற்றி வாய்ப்பை மட்டுமே இழந்துள்ளது. சுமார் ஒரு கோடி வாக்குகளைப் பெற்றுள்ளோம். வெறும் 17 லட்சம் வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம். மக்கள் மாற்றம் வேண்டுமென்று ஏமாற்றம் அடைந்து திமுக மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
1949-ஆம் ஆண்டு அண்ணா தொடங்கிய திமுக, கலைஞர் வழியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியது. அதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியையும், தமிழக மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட்டு, தமிழகத்தை இந்தியாவின் முன்னோடி மாநிலமாக மாற்றினார். சமூக நீதி அடிப்படையில் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற கொள்கையுடன் திமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
எதிர்கால தலைமுறையினர் கொள்கைப் பிடிப்புடன் திமுகவின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த ஜென்’சி இளைஞர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், தற்போதைய அரசியல் சூழல், பல்வேறு ஆட்சிக்காலங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், அமைச்சர்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து கேள்வி-பதில் முறையில் விவாதிக்கப்பட்டது.
மேலும், விழிப்புணர்வு போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களிடம் “தலைமைச் செயலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட டிபன் பாக்ஸ் வேண்டுமா அல்லது பிறந்தநாளில் வெட்டப்பட்ட கேக் வேண்டுமா?” என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், போட்டியாளர்கள் இரண்டுமே தேவையில்லை என்றும், “கருப்பு சிவப்பு” என்ற புத்தகத்தையே பெற விரும்புவதாக பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில பொறியாளார் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மண்டல தலைவர்கள் பால குருசாமி, நிர்மல்ராஜ் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, அருணா தேவி, மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர அயலக அணி அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், மாநகர மாணவரணி அமைப்பாளர் வினோத், துணை அமைப்பாளர் கிங் பாலா, மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், வட்டச் செயலாளர்கள் கதிரேசன், கங்கா ராஜேஷ், பாலகுருசாமி, கருப்பசாமி சுரேஷ் மகாராஜா கவுன்சிலர்கள் பொன்னப்பன், அந்தோணி மார்ஷலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
