நெய்தல் விழா! கனிமொழி MP முன்னெடுப்பில் தூத்துக்குடி வஉசி கல்லூரியில் தொடக்கம்
நெய்தல் தூத்துக்குடி 5 வது கலை விழா, இன்று மாலை தூத்துக்குடி வஉசி கல்லூரி மைதானத்தில் கனிமொழி கருணாநிதி எம்பி முன்னெடுப்பில் இயல் இசை நாடகம் என முத்தமிழுடன் தொடக்க விழா நடைபெறுகிறது.
தூத்துக்குடி
தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடியில் நெய்தல் கலை திருவிழா இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 5 வது “தூத்துக்குடி நெய்தல் கலைத் திருவிழா 2026” ஆகஸ்ட் 14 முதல் 16 ஆம் தேதி வரை வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள், 5வது நெய்தல் கலைத் திருவிழா தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.
5வது நெய்தல் கலைத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட மண் சார்ந்த கலைஞர்கள், தங்களது கலைத் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.
பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்
கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், ஜிம்பளா மேளம், பொய்க்கால் குதிரை, கிராமிய நிகழ்ச்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உணவுத் திருவிழா
நெய்தல் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தமிழ்நாட்டின் ஆம்பூர், காயல்பட்டினம், உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் காரசாரமான இலங்கை உணவு வகைகள் அறிந்து கொள்ளும் வகையில் 30க்கும் மேற்பட்ட அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்து.
முதல் நாள் ஆகஸ்ட் 14 வெள்ளி அன்று மாலை 5.30 மணியளவில் கணேஷ்கா சிலம்பம் நிகழ்ச்சியுடன் 5 ஆவது “நெய்தல் தூத்துக்குடி கலை விழா 20026” துவக்க விழா நிகழ்ச்சியுடன், தேவராட்டக் கலை, பெரிய மேளம், தேன்மொழி ராஜேந்திரன் கரகம் நிகழ்ச்சி, சேவா ஆட்டம் கலைக்குழு மற்றும் பல்வேறுவகையான கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக தொடங்குகிறது.
2ம் நாள் (ஆகஸ்ட் 15 ) நிகழ்ச்சி;
தூத்துக்குடி சகா கலைக்குழு நிகழ்ச்சி, திருக்கைலாய வாத்தியக் குழு, கணியான் கூத்து, தப்பாட்டம் , கயத்தாறு கும்மி கோலாட்டம், பறவைகள் காணிக்காரன் நடனம், மற்றும் கேபர் வாசுகி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
3ம் நாள் (ஆகஸ்ட் 16)) நிகழ்ச்சி:
தூத்துக்குடி தமிழன்டா கலைக்குழு, தமிழிசை இன்னிசை, உவரி களியல் குழு, ஜிக்காட்டம், குஜராத் சித்தி கோமா நடனக் குழு, மற்றும் சூப்பர் சிங்கர்ஸ் ராஜகணபதி, ஹரிப்பிரியா – நவீன் நண்பர்கள் இசைக்குழு ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த தூத்துக்குடி நெய்தல் கலை விழாவில் முன்னாள் அமைச்சர்கள் பெ.கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
எம்.எல்.ஏ, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் விளாத்திகுளம் ஜிவி.மார்கண்டேயன், கோவில்பட்டி கா.கருணாநிதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
தூத்துக்குடி மக்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் இந்த மண் சார்ந்த நெய்தல் கலை நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட வசதிகள் மிகவும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது.
