ராணுவ வீரர் மரணம் கனிமொழி MP அஞ்சலி
தூத்துக்குடி, கே.பி.தளவாய்புரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுடலைமணி வீர மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு கனிமொழி எம்பி, நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கே.பி.தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுடலைமணி அவர்கள் அஸ்ஸாம் மாநிலத்தில் வீர மரணம் அடைந்துள்ளார். அவரது உடல் இன்று 27/06/2026 சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டம், கூட்டுடன்காடு கிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பை.மூ.ராமஜெயம், திமுக ஒன்றிய செயலாளர்கள் கே.கே.ஆர்.ஜெயக்கொடி, சுப்ரமணியன், தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
அஸ்ஸாம் மாநிலத்தில் எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, ராணுவ வீரர் சுடலைமணி வீர மரணமடைந்தார். இவரின் மறைவுச் செய்தி மேலக்கூட்டுடன்காடு மற்றும் தளவாய்புரம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீர மரணமடைந்த சுடலைமணியின் உடலை விமானம் மூலம் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டது. அவரின் உடல் ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
