செய்திகள்தமிழ்நாடு செய்திகள்

வணிக சிலிண்டர் விலை உயர்வு! மக்களின் துயருக்கு தீர்வு காண முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

Share the news

நாடு முழுவதும் வணிக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் துயரை எண்ணிப் பார்த்து ஒன்றிய அரசு தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

மே 1 முதல் வணிக சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தி உள்ளன சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ. 993 வரை உயர்ந்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.3,237 வரை உயர்ந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள்! தேர்தலுக்கு முன்பே கணித்ததுபோல், தேர்தல் முடிந்தவுடன் எல்பிஜி விலையை உயர்த்தியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது மேற்காசிய போர் என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல. இந்த எல்பிஜி விலை உயர்வு ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன