அண்மை செய்திகள்செய்திகள்

சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றி!

Share the news

பிரீமியர் லீக் டி-20 போட்டியில், சென்னை அணிக்கு எதிராக குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் அபார ஆட்டம்!

சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியின் துவக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ருதுராஜ் களமிறங்கினர். இருவரும் ரன் குவிக்க முடியாமல் தடுமாறினர். 3வது ஓவரில் ரபாடா வீசிய பந்தில் 11 ரன் எடுத்திருந்த சாம்சன் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உர்வில் படேலும் அதே ஓவரில் 4 ரன்னுக்கு அவுட்டானார்.
இதற்கு அடுத்த ஓவரில் வந்த சர்பிராஷ் கான் ரன் ஏதுமின்றியும், பிரேவிஷ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால், சென்னை அணி 37 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. அதன்பிறகு வந்த துபே (22) ஓரளவுக்கு ரன் சேர்த்தார். விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும், மறுமுனையில் கேப்டன் ருதுராஜ் மட்டும் நிதானமாக ஆடி ரன் குவித்தார். அவர் 49 பந்தில் அரைசதம் அடித்தார்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ருத்துராஜ் 60 பந்துகளில் 74 ரன் குவித்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் குவித்துள்ளது. குஜராத் தரப்பில் ரபாடா 3 விக்கெட்டும், அர்ஷத் கான் 2 விக்கெட்டும், சிராஜ், சுதர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
159 ரன் என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுப்மன் கில் 33 ரன்களுக்கு நுார் அஹ்மத் பந்தில் அவுட் ஆனார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன