உள்ளூர் செய்திகள்செய்திகள்

தூத்துக்குடி அஞ்சலகங்களில் விடுமுறை நாட்களில் ஆதார் சேவை செயல்படும்

Share the news

தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் ஆதார் சேவை மையம் ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் ஆதார் சேவையை வழங்கி வருகிறது. தற்போது பொதுமக்களின் கூடுதல் வசதிக்காக வார நாட்களில் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை ஆதார் சேவை மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்குச் செல்பவர்களின் வசதிக்காகவும், கோடை விடுமுறையில் பள்ளிச் செல்லும் குழந்தைகள் தங்கள் ஆதாரில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைமை அஞ்சலகம் தவிர, தூத்துக்குடி கோட்டத்தைச் சேர்ந்த கீழ்க்காணும் அஞ்சலகங்களிலும் ஆதார் பதிவு மற்றும் திருத்தச் சேவைகள் வழங்கப்படுகின்றன:

ஆழ்வார்திருநகரி, ஆறுமுகநேரி, ஆத்தூர், சிதம்பரநகர், ஏரல், காயல்பட்டினம், குலசேகரப்பட்டணம், குரும்பூர், மெஞ்ஞானபுரம், மேலூர், முதலூர், மூக்குப்பீறி, நாசரேத், ஓட்டப்பிடாரம், பரமன்குறிச்சி, புதுக்கோட்டை, சாத்தான்குளம், சாயர்புரம், செய்துங்கநல்லூர், உடன்குடி கிறிஸ்தியானகரம், வல்லநாடு, முத்தையாபுரம், ஆனந்தபுரம், காயாமொழி, கொம்மடிக்கோட்டை, மில்லர்புரம், முடிவைத்தானேந்தல், புதியம்புத்தூர் மற்றும் படுக்கப்பத்து.

கட்டண விவரங்கள்: புதிய ஆதார் பதிவு: இலவசம். 5-7 வயது மற்றும் 15-17 வயதுக் குழந்தைகளுக்குச் செய்யப்படும் கைரேகை/கருவிழிப் புதுப்பித்தல் முற்றிலும் இலவசம். பெயர், முகவரி, வயது, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் திருத்தங்களுக்கு ₹75 கட்டணம் வசூலிக்கப்படும். புகைப்படம், கைரேகை, கருவிழி ஆகியவற்றைப் புதுப்பிக்க ₹125 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கப் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அவசியம் என்பதால், பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலக ஆதார் மையங்களை அணுகிப் பயன்பெறுமாறு தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன