தூத்துக்குடியில் தவெக கூட்டணிக்கு எதிர்ப்பு! காங் கட்சி பதவி ராஜினமா கவுன்சிலர் சந்திரபோஸ் அதிரடி
தூத்துக்குடியில் தவெக – காங் கூட்டணிக்கு எதிர்ப்பு. கட்சி பதவியை ராஜினமா செய்த காங் மூத்த கவுன்சிலர் சந்திரபோஸ்!
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தோ்தல் முடிவில் யாருக்கும் தனி மெஜாாிட்டி கிடைக்காத நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தொிவித்தற்கு எதிா்ப்பு தொிவித்து தூத்துக்குடி 34வது வாா்டு மாமன்ற உறுப்பினா் சந்திரபோஸ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நான் கடந்த 1988 முதல் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்துள்ளேன்.
1996ம் ஆண்டு முதல் நான் தூத்துக்குடி நகரமன்ற உறுப்பினராகவும் பின்பு மாமன்ற உறுப்பினராகவும் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து மக்கள் பணி செய்து வருகின்றேன். திமுக கூட்டணியில் இரண்டு முறையும் காங்கிரஸ் கட்சி சார்பாகவும் தனித்தும் 3 முறையும் மாமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறேன் மேலும் காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறேன். மாநகராட்சி காங்கிரஸ் கட்சி கொறடாவாகவும் செயல்பட்டு வருகிறேன். தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ராகுல் காந்தியின் தவறான வழிகாட்டுதலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தவறான வழிகாட்டுதலாலும் இந்த முடிவை நான் எடுக்கிறேன். எனது மாநகராட்சி கவுன்சிலர் பதவியை தவிர எனது அனைத்து பதவிகளையும் ராஜினமா செய்து பதவியிலிருந்து என்னை விடுவித்துக் கொள்வதாக கடிதத்தில் கூறியுள்ளார். தூத்துக்குடியில் காங்கிரஸ் மூத்த நிர்வாகி கவுன்சிலர் சந்திரபோஸின் இந்த முடிவு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
