அண்மை செய்திகள்செய்திகள்

தூத்துக்குடியில் உலக செவிலியர் தின விழாவில் விருது வழங்கி கௌரவித்த கலெக்டர்

Share the news

கைவிளக்கேந்திய காரிகை என்று அழைக்கப்படும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12ம் தேதி உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி,
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர் பயிற்சி பள்ளி கூட்ட அரங்கில் உலக செவிலியர் தின விழா நிகழ்ச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது
. விழாவில் மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் கலந்து கொண்டு, முதல்நிலை செவிலியர் கண்காணிப்பாளர் அமுதா ராணி, தமிழ்நாடு அரசு செவிலியர் சங்க தூத்துக்குடி செயலாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில், குத்து விளக்கு ஏற்றி, மருத்துவ துறையில் 25 மற்றும் 30 ஆண்டுகளுக்கு மேலாக சேவை புரிந்த செவிலியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி செவிலியர்களின் ஈடு இணையற்ற சேவைகளை பாராட்டி விழா பேருரை நிகழ்த்தினார். முன்னதாக தமிழ்நாடு அரசு செவிலியர் சங்க தூத்துக்குடி இணை செயலாளர் செல்வம் வரவேற்புரை ஆற்றினார். செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் ஞானமுத்து ஜெயந்தி வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் மருத்துவ கல்லூரி துணை முதல்வர் கலைவாணி, அரசு செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி போதகர்கள், மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். செவிலியர்கள் மற்றும் செவிலியர் பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன