தூத்துக்குடியில் திமுக ஆலோசனை கூட்டம் கனிமொழி எம்பி, கீதாஜீவன் பங்கேற்பு
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகம் கலைஞா் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மார்கன்டேயன், கருணாநிதி, மேயர் ஜெகன் பொியசாமி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்து கொண்டு பேசுகையில்; நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நாம் நன்றி மறவாமல் இருந்து வரும் காலங்களில் ஒற்றுமையாக பணியாற்றி தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி அனைவரும் இணைந்து செயல்படுவோம். தற்போதைய தவெக ஆட்சி அதிக நாள் நீடிக்காது. இனி வரும் காலம் நமக்கான காலமாக அமையும் என கனிமொழி எம்பி பேசினார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில்; வடக்கு மாவட்டத்தில் விளாத்திகுளம் கோவில்பட்டி தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளோம் தூத்துக்குடியில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும் வரும் காலங்களில் தலைவர் முக.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி வெற்றி பெறுவோம். ஒற்றுமையோடு பணியாற்றிய உடன்பிறப்புகளுக்கும், கூட்டணி கட்சி நிரவாகிகளுக்கும் நன்றியை தொிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட செயலாளர் கீதாஜீவன் பேசினார்.
திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் 73 சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற செய்ததற்கு நன்றி. கனிமொழி எம்.பி, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோார் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வெற்றிக்கு காரணமாக இருந்ததற்கு நன்றி. ஜூன் 3ம்தேதி கலைஞர் 103வது பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவது. கோவில்பட்டி தொகுதியில் முதல்முறையாக திமுக வேட்பாளர் கருணாநிதி, விளாத்திக்குளம் தொகுதியில் இரண்டாவது முறையாக மாா்கண்டேயன் எம்.எல்.ஏவும் வெற்றி பெற்றதற்கு நன்றியை தொிவித்துக் கொள்வதுடன் தூத்துக்குடி தொகுதியில் மாவட்ட செயலாளர் கீதாஜீவனுக்கு 63 ஆயிரம் வாக்குகள் பெறுவதற்கு உழைத்திட்ட அனைவருக்கும் நன்றி. வரும் 26ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக பணியாற்றிய அண்ணாச்சி என்.பொியசாமியின் 9ம்ஆண்டு நினைவு தினம் 26ம் தேதி அவரது நினைவிடத்தில் கடைபிடிப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், மாநில நிர்வாகிகள் பொறியாளர் அணி அன்பழகன், மீனவர் அணி புளோரன்ஸ், நெசவாளர் அணி வசந்தம் ஜெயக்குமார், சிறுபான்மை அணி பொன்சீலன், கோவில்பட்டி நகர செயலாளர் சுரேஷ், ஒன்றிய கழக செயலாளர்கள் காசி விஸ்வநாதன், செல்வராஜ், மும்மூர்த்தி, ராதா கிருஷ்ணன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, நவநீத கண்ணன், ராதாகிருஷ்ணன், ஜெய கண்ணன், இமானுவேல், முருகேசன், சின்னபாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், நிர்மல்ராஜ், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மேகநாதன், பேரூர் கழக செயலாளர்கள் வேலுச்சாமி, பாரதி கணேசன், சுரேஷ் கண்ணன், கிருஷ்ணகுமார், பாலகுமார் மற்றும் பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவா் செந்தில்குமார் சார்பு அணி அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
