செய்திகள்அண்மை செய்திகள்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பலியானவர்களுக்கு கீதாஜீவன் வீரவணக்கம் செலுத்தினார்

Share the news

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் 8 ம் ஆண்டு வீரவணக்கம் செலுத்தினார்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13பேர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிாிழந்த இருவர் உள்ளிட்ட உயிர்நீத்த தியாகிகள் 15 பேர்களின் 8ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த 15 பேர் படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், துணை மேயர் செ.ஜெனிட்டா, மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மேகநாதன், பொறியாளர் அணி ஜான்சன், மகளிர் அணி கவிதா தேவி, மாநகர துணைச் செயலாளர் கீதா முருகேசன் மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வகுமார், சேர்மபாண்டியன், மருத்துவரணி அருண்குமார், இளைஞர் அணி அமைப்பாளர் அருண் சுந்தர், துணை அமைப்பாளர் ஐ.ரவி, தொழிலாளர் நல அணி முருக இசக்கி,தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அந்தோணி கண்ணன், அருணாதேவி, அண்ணாதுரை, அஸ்வின் துரை, வழக்கறிஞர் அணி நாகராஜன் பாபு, அயலக அணி கிறிஸ்டோபர் விஜயராஜ், வட்ட செயலாளர்கள் டென்சிங், செல்வராஜ், கங்கா ராஜேஷ், சுரேஷ் மகாராஜன், பால குருசாமி, மூக்கையா, சதீஷ்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், சரவணகுமார், ஜெயசீலி, பவானி, வைதேகி, மார்ஷ்லின், நாகேஸ்வரி, ஜான்சிராணி, சந்திரபோஸ், தெய்வேந்திரன் இளைஞரணி டினோ, சூர்யா, மகளிர் தொண்டரணி பெல்லா, மாணவரணி சத்யா, சுற்றுச்சூழல் அணி வினோத், விளையாட்டு மேம்பாட்டு அணி சில்வர்ஸ்டர், நெசவாளர் அணி குமரன், பகுதி ஐடி விங் சுரேஷ்குமார், மாரிமுத்து, பிரதிநிதிகள் பாஸ்கர், செல்வம், மற்றும் அல்பட், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன