கோடையிலும் தாராளமான குடிநீர் சப்ளை. மேயர் ஜெகன் உறுதி
தூத்துக்குடியில் கோடை காலத்திலும் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கி வருவதாக மேயர் ஜெகன் பொியசாமி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி அழகேசபுரம் பகுதியில் நடைபெற்று வரும் குடிதண்ணீர் குழாய் அமைக்கும் பணி, அண்ணாநகர் பகுதியில் புதிய குடிநீர் குழாய் அமைக்க உள்ள பணிகளையும் மேயர் ஜெகன் பொியசாமி நேரில் பார்வையிட்டார். இது குறித்து மேயர் கூறுகையில்; தூத்துக்குடி நகராட்சியாக இருந்த காலத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பல குடிநீர் குழாய்கள் மிகவும் ஆழமான பகுதியில் இருந்த நிலையில் துருப்பிடித்து உடைந்த நிலையில் இருந்த காரணத்தால் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் அவ்வப்போது தடைப்பட்ட நிலையில், மக்களுக்கு குடிதண்ணீர் தடையின்றி வழங்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் புதிதாக ரப்பர் குழாய்கள் தரை மட்டத்திலிருந்து சுமார் 7 அடி கீழ்நோக்கி பதிக்கப்பட்டு கருப்பு மற்றும் புளு கலர் பைப்கள் மூலம் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது ஒருசில இடங்களில் குடிநீர் விநியோகம் செய்யும் போது வரும் அழுத்தம் காரணமாக உடைப்பும் ஏற்படுகிறது. அதையும் முழுமையாக கண்காணித்து சாி செய்து வளர்ந்து வரும் மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகைக்கு ஏற்ப இருபதுக்கும் மேற்பட்ட வார்டுகளில் தினசாியும் சில வார்டுகளில் 2 நாட்களுக்கு ஒருமுறையும் வல்லநாடு கலியாவூர் ஆகிய இடங்களிலிருந்து கொண்டு வரப்படும் குடிதண்ணீர் மாநகராட்சி பகுதியில் உள்ள 39 நீர் தேக்க தொட்டிகளில் ஏற்றம் செய்து அதன் மூலம் எல்லா பகுதிகளுக்கும் குறிக்கப்பட்ட நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கோடைகாலத்தில் நீர்வரத்து குறைவாக இருந்த போதும் எல்லோருக்கும் தடையின்றி நிறைவாக குடிதண்ணீர் வழங்கி வருகின்றோம் இதை அனைவரும் நல்ல முறையில் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அடுத்து வரும் மழைக்காலத்திற்கான முன்னெச்சாிக்கை பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். மாநகராட்சி பகுதி மக்கள் நலன் கருதி முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நேர்மையுடனும் அர்ப்பணிப்புடன் மக்கள் பணி செய்து வருகிறோம் என்று மேயர் ஜெகன் பொியசாமி கூறினார்.
ஆய்வின் போது கவுன்சிலர்கள் ஜான்சிராணி, கனகராஜ், பகுதி செயலாளர் ரவீந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா, இளநிலை பொறியாளர் லெனின், வட்டச் செயலாளர்கள் ரவீந்திரன், முனியசாமி, ஜேஸ்பர் ஞானமார்டின், உள்பட பலர் உடனிருந்தனர். முன்னதாக அண்ணாநகர் பகுதியில் பொதுமக்களிடம் மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து மேயர் கேட்டறிந்தார்.
