செய்திகள்அண்மை செய்திகள்

திமுக தலைவர் ஸ்டாலினிடம் கள ஆய்வை சமர்ப்பித்த மேயர் ஜெகன்

Share the news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் 11 சட்டமன்ற தொகுதி கள ஆய்வு அறிக்கையை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் திமுக கள ஆய்வுக்குழு நியமிக்கபட்டு, தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு நடைபெற்றது, அதன்படி, கடலூர் கிழக்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் கள ஆய்வு செய்ய, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் இசை ஆகியோர் நியமிக்கப்பட்ட நிலையில், இவர்கள் 11 தொகுதிகளிலும் நேரடியாக திமுக நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து களஆய்வின் அறிக்கையை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இசை ஆகியோர் வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன