செய்திகள்அண்மை செய்திகள்

வஉசி கல்லூரி பவளவிழா மலர் முக.ஸ்டாலின் வெளியிட்டார்

Share the news

பவள விழா கண்ட தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் வரலாற்றைத் தாங்கிய நினைவு புத்தகத்தையும், கணினித் தரவுகள் அடங்கிய வஉசி கல்லூரி டிஜிட்டல் டைரியையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

1951இல் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும் எளியவர்களும் தரமான கல்வியை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடும் ஆரம்பிக்கப்பட்டு, பவள விழா கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வ.உ.சி. கல்லூரியின் கடந்த 75 ஆண்டுகால கல்விச் சேவை பயணத்தையும், கல்விப் புரட்சி மற்றும் சமூக மாற்றத்திற்கான வ.உ.சி. கல்லூரியின் பங்களிப்பையும், மாணவ மாணவியரின் வளர்ச்சிக்காக கல்லூரி முன்னெடுத்த திட்டங்களையும் உள்ளடக்கிய நினைவு புத்தகத்தையும், கல்லூரியின் கடந்த கால நினைவுகளை இக்கால தலைமுறைக்கு ஏற்ற வகையில் கணினித் தரவுகளாக புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் அடங்கிய வஉசி கல்லூரி டிஜிட்டல் டைரியையும் ஜூன் 12 நம் தேதி சென்னையில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!

இந்நிகழ்வில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி, முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன், வ.உ.சி. கல்லூரி செயலாளர் சொக்கலிங்கம், வ.உ.சி. கல்வியியல் கல்லூரி செயலாளர் சண்முகம், கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு மற்றும் கல்லூரி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன