கலைஞர் நினைவு நாள் பேரணி, கீதா ஜீவன், மேயர் ஜெகன் பங்கேற்பு
முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி 8 ஆம் ஆண்டு நினைவு தின அமைதிப் பேரணி! தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி:
திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.கீதா ஜீவன் தலைமையில், மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் இவ்வூர்வலம் நடைபெற்றது. அண்ணா நகரிலிருந்து புறப்பட்ட அலங்கரிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் உருவப்பட ஊர்வலம், நான்காம் கேட் மற்றும் புதிய பேருந்து நிலையம் வழியாக எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தை வந்தடைந்தது.
அங்கு அமைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் சிலைக்கும், அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கும் முன்னாள் அமைச்சர் பி.கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.
திரளான நிர்வாகிகள் பங்கேற்பு:
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநிலப் பொறியாளர் அணித் துணைச் செயலாளர் அன்பழகன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் கலைச்செல்வி, பாலகுருசாமி, மாநகரத் துணைச் செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், பொருளாளர் அனந்தையா மற்றும் பகுதிச் செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், மாவட்ட அணி நிர்வாகிகள் அந்தோணி ஸ்டாலின், கவிதாதேவி, பிரபு, அந்தோணி கண்ணன், அருணாதேவி, நிக்கோலாஸ் மணி, தங்கம், ராமர், அருண்குமார், பழனி, ஜான்சன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், மாவட்டப் பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், சேர்மபாண்டி, செல்வகுமார், ராஜ்குமார், மாநிலப் பேச்சாளர் சரத்பாலா ஆகியோரும் பங்கேற்றனர்.
இவர்களுடன் மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், ஆனந்தசேகர், முருக இசக்கி, சாரதி, டைகர் வினோத், ஐடி விங் அண்ணாதுரை, இளைஞர் அணி செல்வின், ரவி, வினோத், நைஸ் பரமசிவம், சாகுல் ஹமீது, பிக் அப் தனபால், பெல்லா, செந்தில்குமார், சத்யா, கருப்பசாமி, செய்யது காசிம், வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், ஆனந்த கேபிரியேல் ராஜ், நாகராஜன் பாபு, ரூபராஜா மற்றும் தொமுச நிர்வாகிகள்,
மாநகராட்சி கவுன்சிலர்கள் வட்டச் செயலாளர்கள், பகுதி அணி அமைப்பாளர்கள், பகுதி பிரதிநிதிகள், முன்னாள் கவுன்சிலர்கள், பகுதி மற்றும் வட்டப் பிரதிநிதிகள் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் இதில் திரளாகக் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
