இளநிலை நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு. 26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து வகையான மருத்துவ படிப்புகளுக்கும் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி, நட்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் வரும் மே 3-ஆம் தேதி மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 552 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை உள்பட 30 நகரங்களிலும், துபாய், அபுதாபி, தோஹா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூர் உள்ளிட்ட 16 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப நடைமுறைகள் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி https://neet.nta.nic.in
இணையதளத்தில் தொடங்கி மார்ச் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு இதுவரை இல்லாத வகையில் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு மையம், ஹால் டிக்கெட் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் இருந்து அதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

