செய்திகள்அண்மை செய்திகள்

முதல்வர் விஜய்க்கு மதர் டிரஸ்ட் கென்னடி வாழ்த்து

Share the news

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய்க்கு, தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தின் மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ்.ஜே கென்னடி வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார். இது குறித்து டாக்டர் எஸ்.ஜே கென்னடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் 18வது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு பனை பாதுகாப்பு – தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தின் மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ்.ஜே கென்னடி வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார்.
மேலும் முதல்வர் ஜோசப் விஜய் தவெக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மூன்று முக்கிய அரசாணைகளில் கையொப்பமிட்டுள்ளார். 2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்களுக்கு 2 மாதங்களுக்கு 200 யூனிட்கள் கட்டண மில்லா மின்சாரம் வழங்கப்படும்.
பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், போதுமான ஆளிநர்கள், பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதியுடன் கூடிய “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” மாநிலம் முழுவதும் உருவாக்கி பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் போதை பொருட்கள் தொடர்பான குற்றங்களை தடுத்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 காவல் நிலையங்கள் மற்றும் 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்கள் என மொத்தம் 65 போதை பொருள் தடுப்பு படை அமைக்கப்படும். என முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவின்படி மேற்கண்ட 3 திட்டங்களும் நடைமுறைக்கு வர உள்ளன. தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் தான் அளித்த வாக்குறுதிகள் தொடர்பான அரசாணை அறிவிப்புக்கு, பதவி பிரமாண விழா மேடையிலேயே ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.
மேலும் கல்வி நிறுவனங்கள் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூட உத்தரவிட்டுள்ளார். மேலும் 21 வயது கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கக் கூடாது. விற்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்கு மேல் மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தி வழங்கியுள்ளார். மேலும் இது போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை கொண்டு வந்துள்ள முதல்வர் ஜோசப் விஜய்க்கும், புதிதாக பொறுப்பேற்றுள்ள 9 அமைச்சர்களுக்கும் டாக்டர் எஸ் ஜே கென்னடி வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார்
.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன