செய்திகள்அண்மை செய்திகள்

முதல்வர் சந்திக்க மறுத்தால் போராட்டம் உறுதி

Share the news

முதல்வர் விஜய் எங்களை சந்திக்க மறுத்தால் போராட்டம் உறுதி தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர் சங்கத்தினர் பேட்டி

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு, பழையகாயல், புல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,000 ஏக்கரில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம் கோரப்பட்டு அதற்கான நிறுவனங்கள் தேர்வு செய்து ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற உள்ள நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே
தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் இத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தத் திட்டம் தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதால் வேறு இடத்தில் திட்டத்தை செயல்படுத்த அரசிடம் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அமைச்சர் கீர்த்தனா நேரில் ஆய்வு செய்து முடிவு தெரிவிப்பதாக கூறியிருந்தாலும் இதுவரை வரவில்லை என உப்பு உற்பத்தியாளர்கள் சங்க தெரிவித்தனர்.

இதற்கிடையே உப்பு உற்பத்தியாளர்கள் சங்க கூடம் முள்ளக்காடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்கத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவா் மந்திரமூர்த்தி செயலாளர் சேகா் பொருளாளா் பொன்ராஜ், உபதலைவா் ராஜபாண்டியன், உள்ளிட்டோா் கூறுகையில், வரும் வாரம் உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், முதலமைச்சர் விஜய்யை சென்னையில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த சந்திப்பு நடைபெறாவிட்டால் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து தூத்துக்குடியில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன