Uncategorized

திருச்சி தவெக அலுவலகம் தீவைத்து எரிப்பு, விஜய் கடும் கண்டனம்

Share the news

திருச்சி தமிழக வெற்றிக் கழக அலுவலகம் மர்ம நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது. போலீசார் விசாரணை. விஜய் கடும் கண்டனம்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும்
தவெக வேட்பாளர் ரமேஷ்க்கு ஆதரவாக பெட்டவாய்த்தலையில் தமிழக வெற்றிக்கழக அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில் மர்ம நபர்கள் சிலரால் தீவைத்து எரிக்கப்பட்டதாகவும், சம்பவம் குறித்து தமிழக வெற்றிக் கழக திருச்சி மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வீரசிவா தலைமையில் தவெக நிர்வாகிகள் பெட்டவாய்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக வெற்றி கழக அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்
.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன